/ கலி காலம்: இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

Thursday, June 21, 2012

இளையராஜாவை நாம் இழிவு செய்கிறோமா?

இரண்டு நாட்களாக ஒரே கூத்து சார்..."இளையராஜாவுக்கு அங்கீகாரம்" என்று தமிழ்  பத்திரிக்கைகளும் மற்ற தமிழ் ஊடகங்களும் ஆனந்த அட்டகாசம் செய்ய..."Ilayaraja song in London Olympics" என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி பரப்ப, கிடைப்பதற்கரிய அங்கீகாரம் ஒன்றை இளையராஜா பெற்று விட்டது போல ஒரு பொய் பிம்பம் நாடெங்கும் நடை போடுகிறது.

"The Times of India" பத்திரிக்கையின் செய்தியை பாருங்கள்: "Music Maestro Ilayaraja has received a rare honour. At this year's London Olympics, scheduled to begin in July, Ilayaraja's song from the 1981 Kamal Haasan flick 'Ram Lakshman' will be played along with a few other samples of world music as part of the opening ceremony." என்று போடுகிறார்கள்.

"The Hindu" சற்று பரவாயில்லை."Who would have ever thought the London Olympics, hardly six weeks away, would have a strong Chennai connection? But thanks to music composer Ilayaraja, it will. A Tamil film song composed by him in the early 1980s has made it to the playlist of the grand opening ceremony." என்று செய்தி.

நமக்கு, "எதை" "எங்கு" "வைப்பது" என்று சுட்டுப் போட்டாலும் வராதே. சம்பந்தம் இல்லாத விஷயங்களை சம்பந்தப் படுத்துவதுதானே நம் வேலையே! ஒலிம்பிக்ஸ், விளையாட்டு சம்பந்தப்பட்டது. இதில் தகுதி பெற்ற நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டும் அங்கீகாரமும் உலக அளவில் வரும், வர வேண்டும் என்று சொன்னால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை விடுத்து, ஒரு துவக்க நிகழ்ச்சியில் இடம்பெறும் இசை கோர்வையில் இளையராஜாவின் ஒரு துளி இடம்பெறுவதால் அவருக்கு அங்கீகாரம் என்று சொல்வது இளையராஜாவுக்கு மட்டுமல்ல, இசைக்கும் இழுக்கு. எதற்கும் எதற்கும் சார் நாம் முடிச்சு போடுகிறோம்?


சரி. தேர்வு செய்ததுதான் செய்தார்கள். எதற்கு இந்த பாட்டு? ஒரு உலகளாவிய விளையாட்டு நிகழ்ச்சியின் துவக்க விழா. "துள்ளல்" நிறைந்திருக்கும் என்பது ஏற்புடையதுதான். எனவே அங்கு "துள்ளல்" இசைதான் எடுபடும் என்பதும் சரியே. ஆனால் இளையராஜா போடாத "துள்ளல்" இசையா? அவ்வளவு ஏன் சார்? இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் "ராம் லட்சுமண்" படத்திலேயே "வாலிபமே வா வா" என்றொரு பாடல் உண்டு. அதன் fast beat இடையே கூட‌ அற்புதமான சங்கதிகள் வைத்திருப்பார் இளையராஜா. அது கண்ணில் படாமல் போனது எப்படி?



"வாழ்க்கை" படத்தில் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற பாடல்...இதன் தாளக்கட்டையும் வயலினையும் உலகமே ரசிக்கலாமே? "ராஜ பார்வை" படத்தின் title music  பிற்பகுதியில் வரும் அந்த western bit, புன்னகை மன்னனில் வரும் அந்த track என்று நூற்றுக்கணக்கான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாமே? அப்புறம் ஏன் இந்த பாட்டு?

லாஜிக் ஏதாவது தெரிகிறதா? எனக்கு, இப்படி ஒரு லாஜிக் இருக்குமோ என்று தோன்றுகிறது:
யாரோ ஒருவர், இளையாராஜா படங்கள் பெயரை கணிப்பொறியில் ஓட விட்டு கண்ணை மூடிக் கொண்டு, தனது கை, கணிப்பொறி திரையில் எங்கு தொடுகிறதோ அந்த இடத்தில் இருக்கும் படப்பெயரை தேர்வு செய்து இருக்கக் கூடும். இந்த வகையில் "ராம் லக்ஷ்மணன்" மாட்டிக் கொண்டிருக்கக்கூடுமோ என்ற எண்ணம் நமக்கு தோன்றுவதில் வியப்பில்லை.பிறகு இதே "முறையை" பின்பற்றி அப்படத்திலிருந்து ஒரு பாடலையும் தேர்ந்தெடுத்து விட்டார்களோ என்னவோ?

ஒரு மாபெரும் தேசத்தின் பாரம்பரியம் மிக்க தென்னிந்திய மாநிலங்களில், இரண்டு தலைமுறைகள் வளர்ந்த விதத்தையே மாற்றியமைத்த ஒருவரின் அற்புதமான ஆயிரம் compositions இருக்க, இந்த பாடலின் இசையின் மூலம் இவர்தான் இந்தியாவின் சொத்தான இளையராஜா என்று உலகம் அறிவதன் பெயரா அங்கீகாரம்?

"Another world famous composition from India" என்று "why this kolaveri" பாடலை சேர்த்து "இந்தியாவுக்கே அங்கீகாரம்" என்று நம் பத்திரிகைகள் நாட்டியம் ஆடும்படி செய்யாமல் விட்டார்களே. அந்த அளவில் ஒலிம்பிக் துவக்க விழா இசை குழுவுக்கு கோடானு கோடி வந்தனங்கள்!



முக்கியமான கருத்து:


1."இளையராஜாவின் மிகச் சாதாரணமான சராசரி பாடல்கள் கூட ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு போவதில், இளையராஜாவினால், அந்தத் துவக்க விழா அங்கீகாரம் பெறுகிறது" என்று மாற்றிச் சொல்லுவோம். உரக்கச் சொல்லுவோம். 

2. இன்று வரும் பெரும்பாலான அர்த்தமற்ற கூச்சல் சத்தமிக்க பாடல்களை விட இந்த பாடல் எவ்வளவோ நன்றாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதுவும், 1981ல் முப்பது படங்கள் இசையமைத்த இளையராஜா, "பொழுது போக்கு" நிமித்தமாக போடும் பாடல்களில் கூட எப்படிப்பட்ட‌ உழைப்பும் அர்ப்பணிப்பும் காட்டுவார் என்பதற்கு இந்த பாடல் ஒரு உதாரணம்.

3. பள்ளி நாட்களில் கபடி விளையாட்டில் "கபடி கபடி" என்று சொல்வதற்கு பதிலாக இந்த பாடலை வேகமாக சொல்லும் சிறுவர்களுடன் விளையாடிய பொழுதுகளையும், வகுப்பறையில் விளையாட்டாக சண்டையிடும் பொழுது இப்பாடலை சொல்லியபடி ஓடி வரும் மாணவர்களையும் நினைவில் மீண்டும் கொண்டு வந்த London Olympics துவக்க விழா குழுவுக்கு நன்றி.

21 comments:

  1. padhivu nandru
    surendran

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு..... எத்தனையோ அங்கீகாரங்கள் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டியது..... ஆனாலும்... :(

    ஏதோ நீங்கள் கடைசியில் சொன்ன மாதிரி தான் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும் நண்பரே.....

    ReplyDelete
  3. தமிழரை ஒழிக்கும் பார்பனீயத்தின் அடிமை இளைய ராஜா.
    சங்கரச்சாரி தவறு செய்தவர் என்று தெரிந்தும் தலையில் தூக்கி ஆடும் மனிதர்.
    பெரிதாக வளர்ந்த பின் சமுகத்தில் உள்ள பிற்படுத்த பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்.
    அதுவே கொடுத்த மக்களுக்கு நன்றி கடன்,
    அதை விடுத்தது பார்பான் கற்பித்த முக்தி என்ற தனி மனித சுகத்தை தூக்கி பிடித்து கோயில் குளம் அலையும் மனிதர்.
    இவ்வளவு வளர்ந்த பின்னும் சமுகத்தில் நிலவும் அவலங்களை தைரியமாக எதிர்க்காமல் இருந்தால் எப்படி,
    எதிர்த்தால் பார்ப்பனீயம் இளையராஜாவை கேவலபடுத்தி நிர்மூலமாக்கி அனுப்பும் என்ற உண்மை தெரிந்து இருக்கலாம்.
    இவருக்கு எதற்கு அங்கிகாரம்? அதை வைத்து ஒன்றும் ஆக போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. Anonymous (June 23, 2012 5:55 AM)அண்ணே பார்பனிய தாழ்த்தப்பட்ட அப்படிங்கற மனோவியாதியில இருந்து கொஞ்சம் வெளிய வாங்க தல சுத்துது. அப்புறம் மொதல்ல மனுசனா பேசுங்க அதுக்கப்புறம் ஆன்மீகத்த பத்தி பேசலாம் நான் anonymous இல்ல தமிழ்நாட்டுல இருக்கிற ராமசாமி தான்

      Delete
  4. Anna, Ramesh here.. I think there is a reason behind to select this song - http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2012/06/120618_olympicsong.shtml, Olympic committee might want to promote kabadi .

    ReplyDelete
  5. You guys might even say that the sun shines out of Raja's a$$. The Olympics is a global event. Even your sporting God Sachin does not mean much there. Please explain how the event will be honored by using, in its opening ceremony, one of the crappiest songs of a composer known mainly in South India?

    ReplyDelete
  6. இளையராஜா என்றதும் அவரின் ஆயிரக்கணக்கான தாலாட்டும் இசைகள் தான் ஞாபகம் வரும் நமக்கு, ஆனால் சில குதர்க்கவாதிகளுக்குத்தான் அவரின் ஜாதி நினைவுக்கு வரும். அய்யா " எல்லாம்தெரிந்த ஏகாம்பரம்"களே .... அவரின் இசையை மட்டும் பருகுங்கள் , அதை மட்டுமே அவர் நமக்காக கொடுக்கிறார், மற்றபடி ஆன்மிகம், சுயசாதி பற்றின்மை எல்லாம் அவரின் தனிப்பட்ட விஷயம். கோடிகோடி ரசிகர்கள் நெஞ்சில் ( தமிழ்,தெலுகு,மலையாளம்) உயர்ந்த இடத்தில் இருக்கிறார், இதற்க்கு மேலான கவுரவம் என்று வேறு என்ன இருக்க முடியும்? என்று அவருக்கு அங்கீகாரம் கிடைக்கல என்று புலம்புவோர் கூறலாம்....

    ReplyDelete
  7. இளையராஜா என்றதும் அவரின் ஆயிரக்கணக்கான தாலாட்டும் இசைகள் தான் ஞாபகம் வரும் நமக்கு, ஆனால் சில குதர்க்கவாதிகளுக்குத்தான் அவரின் ஜாதி நினைவுக்கு வரும். அய்யா " எல்லாம்தெரிந்த ஏகாம்பரம்"களே .... அவரின் இசையை மட்டும் பருகுங்கள்
    Very well said Mr.Vivek Kayamozhi.
    Logesh Aravindan

    ReplyDelete
  8. Nicely written article but i wish to point out that this particular song was selected for Kabaddi event and i feel this song is most appropriate.
    Logesh Aravindan

    ReplyDelete
  9. அருமையான பதிவு
    தங்கள் ஆதஙகமும் சரியே
    ஆனாலும் இளைய ராஜா அவர்கள் நீங்களாக
    வேறு யாருடைய இசையைத் தேர்ந்தெடுத்திருந்தால்
    அதை வேறு விதமாக விமர்சித்திருப்போமா
    இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த யாருடைய
    இசையையும் ஒலிம்பிக்கில் இசைக்கப்படவில்லையெனில்
    இது பெருமைக்குரியது இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்து ராஜா என்றும் ராஜா

      Delete
  10. நான் நினைத்ததை தாங்கள் நெத்தியடியாக சொல்லி விட்டீர்கள்ரொம்ப நன்றி! தெய்வத்தை கூட இவர்களின் சராசரி சண்டைக்குள் இழுப்பது அநாகரீகம்!

    ReplyDelete
  11. அப்படியே எந்தப் பாடலை ஒலிம்பிக்'க்கில் இசைக்க எடுத்திருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கலாம்...

    எம் எஸ் வி,இளையராசா மற்றும் எஸ்பிபி போன்றவர்கள் ஒருகால கட்டத்தின் கூறுகள்.
    அவர்களை மீள எதிர்பார்ப்பது கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

    ReplyDelete
  12. This song has been selected because it is about SPORTS. Other songs you have mentioned are not about sports.

    Saravanan

    ReplyDelete
  13. that song is Nandhaan Ungappanda

    ReplyDelete
  14. நீங்க இளையராஜாவை பெருமையா பேசுறீங்களா இல்லை கேவலப் படுத்துறீங்களான்னே தெரியவில்லை. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஒலிம்பிக் கமிட்டி தேர்ந்தெடுத்த பாடலை இளையராஜா சரியாக இசையமைக்க வில்லை என்பது போல இருக்கிறது. மேலும் ரசனை ஆளாளுக்கு மாறுபடும். எல்லோரும் உங்களைப் போலவே ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இளையராஜா பாடல் ஒலிம்பிக் துவக்க விழாவில் இடம் பெறுவதே மகிழ்சிக்குரிய செய்தி, அதில் நொள்ளை நொட்டை பார்ப்பது எதற்கு?

    ReplyDelete
  15. ஏதோ ஒரு விதத்தில் அந்தப் பாடல் கவர்ந்திருக்கவேண்டும். ஏதோ அஒன்று என்று தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.

    ReplyDelete
  16. கடைசியில் இளையராஜாவின் பாடல் பாடப்படவேயில்லை. உண்மையில் இது வெறும் வதந்தி என்பதில் சந்தேகமேயில்லை.ஏன் ஒன்றுமேயில்லாத விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம்? இளையராஜா அகில உலக அளவில் இன்னும் எதையுமே சாதிக்கவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete